ஓரிதழ் தாமரை. சித்த மருத்துவ மூலிகை மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு இந்த ஓரிதழ் தாமரை பற்றிய அறிமுகம் இருக்கும். இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியை கொண்டது. இதன் பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இதழ்களின் நடுவில் நாமம் போன்று இருக்கும். வயல் வெளிகளில் சதுப்பு நிலங்களில் இந்த செடியை பார்க்கலாம். இந்த ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் என இந்த செடியின் ஒவ்வொரு பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டது.

ஓரிதழ் தாமரை, சீரகம், செந் சந்தனம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, அதிமதுரம் நாட்டு சர்க்கரை போன்றவற்றை கொண்டு இந்த ஓரிதழ் தாமரை சூரணம் தயாரிக்கப்படுகிறது.
இந்த சூரணத்தை காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் 2 முதல் 4 கிராம் வரை கணக்கிட்டு நெய் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும். உணவுக்கு பிறகு இதை எடுத்துகொள்ள வேண்டும்.
குழந்தை பேறு கிடைக்கும் வரை இந்த சூரணத்தை ஆண்கள் சாப்பிட வேண்டும் மேலும் இதை சாப்பிடுவதால் எந்த விதமான பக்கவிளைவுகளும் இருக்காது.
ஓரிதழ் தாமரை சூரணம் ஆண்களுக்கு செய்யும் நன்மைகள்:
குழந்தையின்மை பிரச்சனையில் ஆண்களின் விந்தணுக்களில் வீரியம், எண்ணிக்கை, தரம் போன்ற குறைபாடுகள் காரணமாக இருக்கும் போது இந்த ஓரிதழ் தாமரை எடுத்துகொள்ளலாம். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு குழந்தையின்மை பிரச்சனை தவிர்க்கவும் இல்லற வாழ்க்கையில் குறைபாடில்லாமல் பார்த்துகொள்ளவும் இந்த ஓரிதழ் தாமரை உதவும்.

